Thanjavur

கடன் இல்லாத மாநகராட்சி; தமிழகத்தில் முதலிடத்தை பிடித்தது தஞ்சை

Source : Dinathanthi - 29 Oct, 2022
IMG

தஞ்சாவூர்

 கடன் இல்லாத மாநகராட்சி பட்டியலில் தஞ்சை மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இனி வரும் வருவாயை கொண்டு தஞ்சை மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடையும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார். மாநகராட்சி கூட்டம் தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:- துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் விரிவாக்க பகுதிகளில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருகின்றன. எனவே காலிமனையில் உள்ள செடிகளை அகற்ற உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட வேண்டும்.

கடன் இல்லாத மாநகராட்சி 

ஜெய்சதீஷ் (பா.ஜ.க.) :- எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்நுளை குழி 10 ஆண்டுகளுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடப்படாததால் சாலை சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் முதன்முதலாக தஞ்சை மாநகராட்சி தான் கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்த அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு விட்டன. மாநகராட்சி கடைகள், டெண்டர் வெளிப்படை தன்மையாக நடந்ததால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது. இன்னும் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பொது ஏலமிடப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும். அப்போது மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடையும். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்'என்றார்.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Dinathanthi

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}