தஞ்சை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் !!
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் திமுக உத்தேச வேட்பாளர்கள் பற்றிய பதிவை கடந்த மாதம் 24ஆம் தேதி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அதிமுக உத்தேச வேட்பாளர்களை பற்றிய தொகுப்பு.
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710861158.jpg?1710860762136)
மா. சேகர்
மா. சேகர், தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர். அதிமுக சார்பாக தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்து தற்போது மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் மா. சேகர் அவர்களின் மக்கள் தொடர்பு மற்றும் எளிமையாக மக்களை அணுகும் அவரது செயல்களால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் தென்பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபராக அறியப்படுகிறார்.
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710861558.jpg?1710861155976)
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்துள்ள மா சேகர் அவர்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் பொறுத்திருந்து பார்ப்போம் போட்டியிட விரும்புகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதிமுக சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் களம் காண்பார மா சேகர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
![](../uploads/ad/1710859747.jpg)
N S சரவணன்
அதிமுக தஞ்சை மாநகர செயலாளர் N S சரவணன் அவர்களும் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருக்கான ரேஸில் இருப்பதாக தெரிகிறது. அதிமுக பிளவின் பொது தஞ்சை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியில் தொடர்ந்து அதிமுகவின் முகமாக தஞ்சையில் செயல்பட்டவர் சரவணன் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைமை கழக நிர்வாகிகளின் பாராட்டை பெற்றவர் சரவணன் என்கின்றனர் தஞ்சை அதிமுகவினர்.
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710861972.jpg?1710861555222)
பிளவுபட்ட அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் அணியினரை எடப்பாடி அணியில் இணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் சரவணன் அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகளின் ஆதரவும் உள்ளதாக தகவல்கள் வருகிறது. தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் போட்டியிட தயாராகி வரும் சரவணன் , அதிமுக தலைமை வலியுறுத்தும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகின்றது.
![](../uploads/ad/1710859791.jpg)
S.D.S.செல்வம்
SDS செல்வம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இவர் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின் மகன். இவரது தந்தை தஞ்சை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடதக்கது.
கல்வியாளர் மற்றும் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள SDS செல்வம் அவர்கள் அதிமுக புரட்சி தலைவி பேரவையின் மாநில துணை செயலாளராக பதவி வகிக்கின்றார்.
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710862174.jpg?1710861969839)
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு வழங்கியுள்ள செல்வம் அவர்கள் தேர்தல் களப்பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவரது குடும்ப பின்னணி மற்றும் இவரது களப்பணிகளின் காரணமாக அதிமுக தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில் இவர் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம்.
![](../uploads/ad/1710859915.jpg)
Dr.இனியன் காமராஜ்
Dr இனியன் காமராஜ், தமிழக முன்னாள் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரான காமராஜ் அவர்களின் மகன். மருத்துவர் மற்றும் இளைஞர் என்பது இவருக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகின்றது.
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய நபராக கருதப்படும் காமராஜ் அவர்கள், தனது மகனை நாடாளுமன்ற தேர்தலில் தற்போது களமிறக்கினால் அவருக்கான அரசியல் பயணத்திற்கு வழிவகுக்கும் என நம்புவதாக தகவல் தெரிவிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710862308.jpg?1710862171813)
நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திட பொருளாதார ரீதியாகவும் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும் காமராஜ் அவர்களால் மட்டுமே முடியும் என்பதால் அவரது மகன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
![](../uploads/ad/1710859715.jpg)
Dr.தங்கக்கண்ணன்
தங்கக்கண்ணன், அ.தி.மு.க. மாநில விவசாய பிரிவு முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கு.தங்கமுத்துவின் மகன்
அதிமுக பிளவு பட்டபோது எடப்பாடி பழனிசாமி அணியில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவை பெற்றவர். பல்மருத்துவரான இவர் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
![](https://voiceup.co.in/uploads/images/20240319/1710863067.jpg?1710862305397)
மறைந்த இவரது தந்தை பெயரில் அறக்கட்டளை தொடங்கி மக்களுக்கு உதவிகள் வழங்கி வரும் இவர் எளிதில் அணுகக்கூடியவராகவும் அதிமுக கட்சி நிர்வாகிகள் குடும்ப நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதால் கட்சி நிர்வாகிகளின் அன்பை பெற்றவராகவும் உள்ளார். அதிமுக சார்பாக தேர்தல் களம் காண விரும்பும் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
![](../uploads/ad/1710860056.jpg)
நாளை திமுக வேட்பாளர்கள் அறிவிக்கபட உள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கலாம்.
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News