மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தஞ்சை மேயர் - கள நிலவரம் !!
தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் தலைநகரமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளையும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 222619 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் தஞ்சை மாநகராட்சியின் 51 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 39 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாஜக 1 வார்டையும், அமமுக 1 வார்டையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தலில் சன் ராமநாதன் அவர்கள் மேயராகவும் டாக்டர் அஞ்சுகம் பூபதி துணை மேயராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
![](https://voiceup.co.in/uploads/images/20240304/1709567633.jpg?1709567484671)
மேயர் சன் ராமநாதன் பின்னணி !!
பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த சன் ராமநாதன், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்த காலகட்டத்தில் கட்சியின் தொண்டராக கழக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கினார். இளைஞரணியில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் துணை அமைப்பாளராகவும் பின்னர் தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் செயல்பட்டார்.
![](../uploads/ad/1708783033.jpg)
தேர்தல் அரசியலில் 2006ல் முதல் முறையாக கவுன்சிலராக தேர்வாகினார், பின்னர் 2011 மற்றும் 2022 என மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். கடந்து 2022 தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பதவி வகித்து வருகிறார்.
தஞ்சையில் வளர்ச்சி பணிகள் !!
தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசில் அறிவிக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில், உள்கட்சி பூசல் மற்றும் ஆட்சியின் இறுதியில் இருந்ததனால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அறிவிப்போடு நின்றன.
சன் ராமநாதன் மேயராக பதவியேற்ற உடன் அனைத்து திட்டங்களையும் துரிதப்படுத்தினர் என அரசு அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை ஒரு சேர ஆமோதிக்கின்றனர். அரசு அதிகாரிகளிடம் இணக்கமாக செயல்பட்டு திட்டங்கள் அனைத்தையும் வேகப்படுத்தினார். தஞ்சை பழைய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தி, கடைகளை பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விட்டு மாநகராட்சியின் வருவாயை பெருக்கினா
![](../uploads/ad/1708783320.jpg)
கீழவாசல் இறைச்சி கூடம், ராஜப்பா பூங்கா, பெத்தண்ணன் கலையரங்கம், திருவள்ளுவர் திரையரங்க வணிக வளாகம், திருவையாறு பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், காமராஜ் மற்றும் சரபோஜி சந்தைகள், அய்யன் குளம் மற்றும் சாமந்தான் குளம் மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் மற்றும் திமுக தலைமையின் கவனத்தைப் பெற்றார்.
மேயரின் மக்கள் தொடர்பு உத்தி!!
தஞ்சை மேயர் தனது பணியோடு மக்களின் தொடர்பில் இருப்பதன் முலமே தனது அரசியல் நெடும்பயணம் இருக்கும் என்பதை தெளிவாக அறிந்து அதற்கான அன்றாட பணிகளை தனது மேற்பார்வையிலேயே செய்வதாக தகவல்கள்.
அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது, அவரின் நிகழ்ச்சி நிரல்களை முன்னரே பொதுமக்களுக்கு தொகுத்து சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இல்ல நிகழ்வுகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவை இவரது மக்கள் தொடர்பு உத்திகளாக பார்க்கப்படுகின்றது. எளிமையாக பொதுமக்களை சந்திப்பது உள்ளிட்ட மேற்குறிய அவரின் உத்திகள் அவருக்கு மிக பெரிய அளவில் பலன் தருவதை மறுப்பதற்கில்லை.
![](../uploads/ad/1708783060.jpg)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்த இவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்களோடும் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். அதன் மூலம் தஞ்சை மாநகர செயலாளர் பதவியும் பெற்று கட்சி பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.
திமுக நிர்வாகிகள் பலருக்கு அரசு திட்டங்கள் மூலம் வருவாய் வாய்ப்பு, கட்சி பதவிகள், மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பெற்று தருவதால் இவரின் ஆதரவாளர்கள் தஞ்சையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அங்கு இருக்கும் வேலை வாய்ப்புகளை அறிந்து அதற்கு பொது மக்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
சிவகங்கை பூங்கா உள்ளிட்ட சிறு சிறு பணிகளில் தேக்கம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் பொது மக்கள் இவரை எளிதில் சந்திப்பது, ஈ சேவை மையங்கள் அமைத்து பணியாற்றுவது, தஞ்சையின் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது இவருக்கு நற்பெயரை பெற்று தருவதாகவே செய்திகள் வருகின்றன.
![](../uploads/ad/1688988889.jpg)
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News