G.K.வாசனின் மத்திய அமைச்சராகும் மனக்கணக்கு !! கதறும் தமாகா நிர்வாகிகள், கலங்கும் கட்சி சீனியர்கள் !!!

தமிழகத்தின் அரசியல் களம் பரபரக்கும் சூழலில் திமுக,அதிமுக , பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டியாக நடைபெற உள்ளது தமிழக பாராளுமன்ற தேர்தல்.
இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் தொகுதி பங்கீடு மற்றும் விருப்ப மனு பெறுவது என சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன. தமாகா தலைவர் G.K.வாசன் அதிமுக மற்றும் பாஜகவை இணைத்திட தீவிரமாக முயன்று, அது நிறைவேறுதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இணைக்கும் திட்டத்தை கைவிட்டார்.
அதிமுக தரப்பில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னர், தமாகா செயற்குழு பொதுக்குழுவை கூட்டி கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்பதாக முடிவு செய்தது தமாகா தலைமை. தமிழகமெங்கும் உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அழைத்த பொழுது, பல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திற்கு வருவதையே விரும்பவில்லை என பல நிர்வாகிகள் தெரிவித்தனர்

அதற்கு முக்கிய காரணமாக நிர்வாகிகள் கூறுவது, கடந்த 2016 ஆம் தேர்தலில் அதிமுக 12 தொகுதிகளை ஒதுக்கிய போது முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்பிய பொழுது G.K.வாசன் மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்தது தமாகா. இதனை சுட்டிக்காட்டிய பல நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிமுக அணியில் இணைவதை வலியுறுத்திய பொழுதும், G.K.வாசன் பாஜகவுடன் கூட்டணியை அறிவித்தார். இதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றது. .
அதிமுகவால் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் G.K.வாசன் அவர்கள் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவோடு இணைந்து செயல்பட்டால் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கருதுவதாக அவரது கட்சி நிர்வாகிகள் பலர் கூறி வருகின்றனர். ஆனால் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி சீனியர்கள் இதில் அதிருப்தியில் இருப்பதாக தமாகாவில் இருந்து விலகிய அசோகன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கதறும் தமாகா நிர்வாகிகள் & சீனியர்கள் !!
G.K.வாசன் அவர்கள் மத்திய அமைச்சராகும் எதிர்பார்ப்பில், தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் இருப்பதாக தமாகா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமாகா சீனியர்கள், தங்களது தொகுதியினை தமாகாவிற்கு ஒதுக்கிவிடுவார்களோ என கலங்குவதாக தெரிவிக்கின்றனர்.
தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்ததன் பின்னணியில் அவர் அதிமுகவில் சேர இருப்பதாக தகவல் வந்த நிலையில், ஈரோடு தொகுதியை கூட்டணியில் பெற்று தன்னை வேட்பாளராக அறிவித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் என அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.
கலங்கும் தஞ்சை மயிலாடுதுறை நிர்வாகிகள் !!
தற்போது தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள தமாகா நிர்வாகிகள், பாஜகவிற்கு இங்கு பலமான கட்டமைப்பு இல்லாததால் எங்கு தமாகாவிற்கு ஒதுக்கப்படுமோ என கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்ட பொழுது தமிழகமெங்கும் உள்ள நிர்வாகிகள் வந்து தேர்தல் பணியாற்றிய பொழுதும் சில நூறு நபர்களே களத்தில் இருந்ததை பார்த்த கட்சி சீனியர்கள் கதறுவதாக கள நிலவரம் கூறுகிறது.
G.K.வாசன் பாஜக அணியில் இணைந்ததை அதிமுக தலைமையும் அதன் தொண்டர்களும் அறவே ரசிக்கவில்லையாம். எடப்பாடி பழனிச்சாமி G.K.வாசன்க்கு மாநிலங்களவை பதவி வழங்கியதை எண்ணி வருந்தியதாக கருத்து தெரிவித்த அதிமுகவினர், G.K.வாசன் அவர்களின் இந்த செயல் புதிதல்ல அவருக்கு மத்திய அமைச்சர் வழங்கிய காங்கிரஸ் கட்சியையே மத்தியில் ஆட்சியை இழந்த பொழுது கைவிட்டவர் என கடந்து செல்கின்றனர்
இன்னும் ஓரிரு வாரங்களில் தமாகா போட்டியிடும் தொகுதியும் அதன் வேட்பாளரும் அறிவிக்கப்படும் என்றும் தமாகாவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என கூறி வருகின்றனர் தமாகா ஆதரவாளர்கள் சிலர்
Source : Sun News, News18Tamil, Puthiyathalaimurai, Thanthi TV
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News