தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் யார் !! வேட்பாளர் தேர்வில் இருப்பவர்களின் பின்னணி !!
கரைபுரளும் காவிரி ஆற்றின் துணையுடன் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை போர்த்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் தஞ்சாவூர்.
தமிழ்நாட்டின் 30வது நாடாளுமன்ற தொகுதியாக உள்ள தஞ்சையில், மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1952 முதல் 2019ஆம் ஆண்டு வரை 19 முறை இந்த தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிக முறை வென்ற கட்சி காங்கிரஸ் தான்.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708778554.jpg?1708778514481)
இந்தியா கூட்டணியில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் முக்கிய தொகுதியாக தஞ்சை பாராளுமன்ற தொகுதி கருதப்படுகிறது. இங்கு திமுக சார்பில் போட்டியிட யார் விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களின் பின்னணியையும் பார்ப்போம்.
1. S.S.பழனி மாணிக்கம்
தஞ்சை பாராளுமன்ற தொகுதி கிழக்கில் அதிராம்பட்டினம் வரையில் நீண்ட தொகுதி. தொகுதி முழுவதும் இவருக்கு பரிட்சியம், வாக்காளர்களுக்கும் இவரது முகம் பரிட்சியம். தமிழகத்தில் எந்தக் கட்சியிலும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நபர் 9 முறை போட்டியிட்டதில்லை. பழனிமாணிக்கம் அதிக முறை போட்டியிட்டதற்கான பெருமையைப் பெறுகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா என்பவர் 13 முறை போட்டியிட்டு 11 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பழனிமாணிக்கம் 9 முறை போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780475.jpg?1708779188679)
பலம் :
அரசியல் மற்றும் தேர்தல் அனுபவம். கடந்த தேர்தலில் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர். தொகுதி முழுவதும் தெரிந்த முகம் மற்றும் பொருளாதார பலம்.
சிட்டிங் MP ஆக இருப்பதால், தலைமை ரிஸ்க் எடுக்க தயங்கும் பட்சத்தில் இவரே வேட்பாளராக இருப்பார் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து. இவரின் வயதின் காரணமாகவோ அல்லது புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் வேட்பாளர் மாற்றம் இருப்பதை மறுப்பதிற்கில்லை
![](../uploads/ad/1703834795.jpg)
2.K.T மகேஷ் கிருஷ்ணசாமி
திருவோணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் K.T மகேஷ் கிருஷ்ணசாமி. இவரது பெயரும் வேட்பாளர் தேர்வில் இருப்பதாக திமுக கட்சியினரே பேசுகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 31 வயதில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தமிழக அரசியலில் கவனம் பெற்றார். பொது மக்களும், கட்சி தொண்டர்களும் இவரை எளிதில் சந்திப்பதும் அணுகுவதும் இவரது பலமாக பார்க்கப்படுகின்றது. மேலும் ஒரத்தநாடு தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இவருக்கென தனி இளைஞர்கள் கூட்டம் இருப்பதை அறிய முடிகின்றது. தமிழக முதல்வர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நன்மதிப்பை பெற்று உள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் பலரும் கூறி வருகின்றனர்.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780493.jpg?1708780477236)
பலம் :
கட்சி தலைமையிடம் இவருக்கு உள்ள நற்பெயர். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்களின் ஆதரவு. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளும் இவரது குணம்.
தேர்தல் அனுபவம், பொருளாதார பலம் மற்றும் கட்சி தலைமையிடம் இவருக்கு உள்ள நல்ல பெயர் உள்ளிட்ட காரணங்களால் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்பது திமுகவினர் கருத்து.
3.ச.முரசொலி
தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, வழக்கறிஞரான இவரின் பெயரும் வேட்பாளர் தேர்வில் அடிபடுகிறது. தஞ்சை வடக்கு ஒன்றியத்தில் கட்சியின் செயல்பாடுகள் சற்றே முனைப்பாக இருப்பதை கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு சேர ஆமோதிக்கின்றனர். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்களின் தீவிர ஆதரவாளர். தீவிர களப்பணியாளரான முரசொலி நாடாளுமன்ற தேர்தலில் களம் காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780511.jpg?1708780494724)
பலம் :
தஞ்சை, திருவையாறு பகுதிகளில் பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளால் நன்கு அறியப்பட்டவர். பெரிதும் பேசப்படும் இவரது கட்சி பணிகளில்.
புதுமுகத்திற்கு வாய்ப்பு தரும் பட்சத்தில் முரசொலி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
![](../uploads/ad/1703912910.jpg)
4.மு க. முகில் வேந்தன்
தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், கல்வியாளரான இவரது பெயரும் வேட்பாளர் தேர்வில் பலமாக அடிபடுகிறது . திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களிடம் நெருக்கமானவர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது அதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் பேருந்திற்கு முன்பு இவர் படுத்து செய்த போராட்டத்தின் புகைப்படம் அன்றைய இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு சென்று தலைமையின் கவனத்தை பெற்றார். தஞ்சை திருவையாறு ஒரத்தநாடு பகுதிகளில் இளைஞரணி முலம் இளைஞர் கூட்டம் இவரது பலம்
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780535.jpg?1708780512596)
பலம் :
இன்ஜினியரிங் படித்த இளைஞர். உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரடி தொடர்பில் இருப்பது. கட்சி இளைஞரணியில் இவரது செயல்பாடுகள்.
உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பில் வேட்பாளர்களை களமிருக்கும் முடிவில் இருப்பதால், புதுமுகம் மற்றும் இளைஞரணிக்கு தஞ்சை தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில், முகில் வேந்தன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
5.Dr அஞ்சுகம் பூபதி
கழக மருத்துவர் அணி மாநில துணை அமைப்பாளர், தஞ்சை மாநகர துணை மேயர். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உள்ள இவர் கடந்த 2016 ஆம் தஞ்சை சட்டமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பொது தேர்தலில் இவருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோதிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் இடைத்தேர்தலில் ஆட்சி மாற்றத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தார். மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தஞ்சை மாநகராட்சி துணை மேயராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தற்போது தஞ்சை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780664.jpg?1708780536681)
பலம் :
மருத்துவம் பயின்ற பெண் அரசியல்வாதி. இடைத்தேர்தல் மற்றும் பொது தேர்தலில் போட்டியிட்டதன் முலம் தொகுதி முழுவதும் அறியப்பட்டவர்.
திமுக தலைமை இந்த முறை பெண்களுக்கு 8 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க இருப்பதாக தெரிகின்றது, அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம்.
![](../uploads/ad/1703739816.jpg)
மன்னை சோழராஜன்
திமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர், மண்ணை சோழராஜன் இவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வருவதால், மன்னார்குடியை சேர்ந்த இவர் களம் காண விரும்புவதாகவும். மாணவர் அணி சார்பாகவும் முயற்சி செய்வதாக அவரது ஆதரவாளர்கள் வட்டத்தில் பேச்சு உலா வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மன்னை நகர்மன்ற தலைவராகவும் உள்ளார்.
![](https://voiceup.co.in/uploads/images/20240224/1708780759.jpg?1708780666188)
பலம்:
குடும்ப பின்னணி மற்றும் பொருளாதார பலம். மன்னை மக்களை நம்பி களம் காண இருக்கிறார்.
தஞ்சையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுகவிற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்படும் தஞ்சையில் திமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்
![](../uploads/ad/1703912932.jpg)
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Lokal APP