செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்...
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.
![](../uploads/ad/1694409682.jpg)
மற்ற நேரங்களை காட்டிலும் இந்தப் பிரதோஷ வேளையில் நாம் வைக்கும் வேண்டுதல் ஆனது மிக விரைவாக பலிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. சிவபக்தர்கள் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்து வந்தால் மோட்சம் நிச்சயம்! வரங்களை வாரி வழங்குவதில் வல்லவராக விளங்கும் ஈசனை பிரதோஷ காலை வேளையில் தெரியாமல் நீங்கள் வழிபட்டாலும் உங்களுக்கு அதற்குரிய பலன்கள் பன்மடங்கு கிடைக்கும்.
சிவனை வழிபட எத்தனையோ முக்கியமான தினங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும் .
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு - பலன்கள்
![](https://voiceup.co.in/uploads/images/20230912/1694495289.jpg?1694495044258)
பிரதோஷ நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ளதாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. நினைத்த காரியம் கைகூடும்; வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மேலும் செவ்வாய் கிழமை சிவ வழிபாடு ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கபடுகிறது
![](../uploads/ad/1694409718.jpg)
உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் பிரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.
செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் , சித்திரை, அவிட்ட நட்காத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு கோவில் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.
இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களில் சிறப்பு அபிஷேக மற்றும் பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : News18