Tamil Nadu

அஇஅதிமுகவின் தனிப்பெரும் தலைவராகிறாரா இ.பி.எஸ் !!

Source : Swag News - 22 Aug, 2023
IMG

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்கு பிறகு திராவிட அரசியல் மற்றும் திராவிட கழகங்களின் அரசியலும் ஆட்சியும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளதை தமிழகத்தின் மற்ற மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் மறுக்கமுடியாதது.

அத்தகைய திராவிட கழகங்களில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , கலைஞர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா மற்றும் இன்றைய முதல்வர் மு .க .ஸ்டாலின் ஆகியோரின் வளர்ச்சி மற்றும் அவர்களின் கட்சி பணி ஆகியவற்றை தமிழக மக்கள் உற்று கவனித்து அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாக தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமரவைத்தனர்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்படாமல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தமிழக முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், முன்னால் முதல்வர்கள் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர் மட்டுமே. இருவரும் அதிமுகவின் முதல்வர்களாக பதவி வகித்து உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்ஐ பொறுத்தவரை அவர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னர்ன் சசிகலா குடும்பத்தினை எதிர்த்து அவரது தர்ம யுத்தம் உள்ளிட்ட போராட்டங்களையும் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து அவரது செயல்பாட்டினையும், பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் அவரது அணுகுமுறையையும் தமிழக அரசியல் களத்தின் பார்வையாளர்கள் நன்கு அறிவர்.

கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவின் தலைமையை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒபிஸ் தரப்பினர் தீவிரம் காட்டிவந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கட்சி அமைப்பு ரீதியான தொண்டர்களின் ஆதரவு ஆகியவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகம் உள்ளதை அணைத்து கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர், அதற்கான சமிக்ஞையாக பிஜேபி தலைமையிலான கூட்டணி கட்சி கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்ததையும் மாறாக ஒபிஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுக்காததையும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ஒபிஸ் தரப்பில் தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலும்,தர்ம யுத்தம் தொடங்கி அவர் எதிர்த்த சசிகலா மற்றும் தினகரனோடு அவர் இணக்கமாக பயணிப்பதையும், பிஜேபியின் கட்டுப்பாட்டுக்குள் அவர் இருப்பதையும் அதிமுகவின் தொண்டர்கள் ரசிக்கவில்லை. இந்நிலையில் மதுரையில் எழுச்சி மாநாடு நடந்து முடிந்த பின்னர் அதிமுக கட்சியினர் மட்டுமல்லாது பொது மக்களிடத்திலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக அறியப்படுகிறாரா எனபதை இங்கு காண்போம்.

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையையும் அவரது அணுகுமுறையையும் ஆதரிக்கின்றனர், இதுவே குறுகிய காலத்தில் அவரது வளர்ச்சிக்கான காரணமாக அனைவராலும் சொல்லப்படுகின்றது.

இது தொடர்பாக ஒரு சிறிய முன்னோட்டம், கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்டு தமிழக முதல்வராக்கப்பட்ட ஒபிஸ் அவர்கள் எப்படி தேனி மாவட்டத்தை தவிர்த்த மக்களுக்கு அறிமுகம் இல்லாதவராக இருந்தாரோ அதை விட ஒருபடி மேலாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவர் சார்ந்த கொங்கு மாவட்ட மக்களுக்கே பெரிதும் அறிமுகம் இல்லாதவராகவே இருந்துள்ளார். 2001 ஆம் முதல்வரான பின்னர் 2006 ஆம் எதிர்க்கட்சி தலைவர் பின்னர் 2014-15, 2016-17 என தொடர்ந்து முதல்வராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ.பன்னிர்செல்வத்தை விட அதீத வளர்ச்சியையும், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களின் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி பெற்றது அவரின் அணுகுமுறையால் தான் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சி !!

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டதன் பின்னணியை அனைவரும் அறிவர், சசிகலா அவர்களால் முதல் அமைச்சராக்கப்பட்ட எக்ஸ் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பெரும்பாலானோர் சசிகலா குடும்பத்தின் அதிகார அரசியலை விரும்பவில்லை என்பதை உணர்ந்து அவர்களிடம் இருந்து விலகி ஒபிஸ் அவர்களுடன் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாராட்டினர். ஆயினும் ஆட்சி காலத்தை முழுமை செய்திட வாய்ப்பில்லை என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மத்திய பிஜேபி அரசுடன் இனக்ககமாக செயல்பட்டு அவரது ஆட்சி காலத்தை நிறைவு செய்தது அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது.

கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலும் இவரது அணுகுமுறை கட்சி நிர்வாகிகள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் அபிமானத்தையும் அவர்களின் ஒத்துழைப்பையும் பெற தொடங்கினார், மாறாக ஓபிஸ் தனது செல்வாக்கினை நாளுக்கு நாள் இழந்து வருவதோடு கட்சி தலைமை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, பிஜேபி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அணுகுமுறையில் மற்றம் உள்ளிட்டவை ஓபிஸ் மற்றும் அவரது அணியை சற்றே நிலைகுலைய வைத்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தனது கட்டுப்பாட்டில் உள்ளதை தமிழக மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் காட்டிட விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் துருப்புசீட்டாக தான் மதுரை மாநாட்டை அரசியல் நிபுணர்கள் பார்க்கின்றனர். அதற்கேற்ப மதுரை மாநாட்டில் அவருக்கு ஹெலிகாப்டர் கொண்டு வரவேற்கபட்டது, முன்னால் அமைச்சர்கள் எடப்பாடி அவர்களை புகழ்ந்து பேசியது, இறுதியாக நீட், கச்சத்தீவு, செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உரை அதிமுகவின் தனிப்பெரும் தலைவராக அவரை உயர்த்தி உள்ளதா என்பதை தாண்டி அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரை முன்னிறுத்தியே களம் காணும் என்பது உறுதியாகிள்ளது.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}