Thanjavur

அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

Source : Lokal APP - 03 Aug, 2023
IMG

அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - அக்னிபாத் திட்டம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இணையவழியாக வருகிற 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https: //agnipathvayu. cdac. in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணையவழித்தேர்வு அக்டோபர் 13-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. 27. 6. 2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 27. 12. 2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152. 5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.

தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப் படுவார்கள். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய விமானப்படை அக்னிபாத்தின் மேலே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் தங்களது முழு விவரத்தை https. //form. gle/k9ynQSJ9NRJoWkoc7 என்ற லிங்கில் பதிவு செய்ய வேண்டும். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகஅளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Lokal APP

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}